Siragadikka Aasai today episode review 13.01.2024 | Vijay Television
Siragadikka Aasai Rohini angry PC Hotstar.jpg
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று அண்ணாமலை மனோஜ் செய்த தவறுகளை விட்டுவிட்டு முத்துவின் கோபத்திற்கு மட்டும் தீர்ப்பளிக்கிறார். முத்துவை இனிமேல் மனோஜை பற்றி பேச வேண்டாம் எனக் கூறுகிறார். மனோஜை வேறு நல்ல வேலை தேடுமாறு கூறுகிறார். பின்னர் மனோஜ் ரோகினி மடியில் படுத்து அழுகிறார். தான் செய்த தவறுகளை உணர்ந்து விட்டதாக அவர் கூறுகிறார். ரோகிணியோ உறவில் காதலை விட நம்பிக்கைதான் முக்கியம் என பாடம் எடுக்கிறார். பின்னர் விஜயா தான் பொய் சொல்லியதற்கு ரோகிணியிடம் சமாளிக்கிறார்.
இதற்குப் பின் காலையில் மனோஜ் புதிதாக ஒரு நேர்காணலுக்கு கிளம்புகிறார். அப்பொழுது முத்து வேலை கிடைக்காவிட்டால் தனது செட்டில் இருக்கும் ஒரு காரை எடுத்து டிரைவர் வேலை செய்யுமாறு கூறுகிறார். அதற்கு ரோகிணி டிரைவர் வேலையை மட்டப்படுத்தி பேச, மீனாவும் கோபமாக ரோகினிடம் வாக்குவாதம் செய்கிறார். அப்பொழுது வந்த அண்ணாமலை மீண்டும் முத்துவை மட்டும் அடக்கி வைத்துவிட்டு மனோஜை நல்ல வேலையில் சேருமாறு கூறுகிறார். பின்னர் மீனாவிடம் விஜயா முத்துவை அடக்கி வைக்குமாறு கூற, மீனாவோ நான் இப்பொழுதுதான் வந்தேன் நீங்கள் பலகாலமாக இங்கு தான் இருக்கிறீர்கள் நீங்கள் உங்கள் மகனை அடக்கி வைக்க முயற்சி செய்யுங்கள் எனக் கூறிவிட்டு என் கணவரும் நானும் யாரையும் ஏமாற்றவில்லை என ஜாடையாக பேசிவிட்டு செல்கிறார். ரோகினி கோபமடைய விஜயா அவரை சமாதானப்படுத்துகிறார்.