Siragadikka Aasai today episode review 17.01.2024 | Vijay Television
IMG 20240117 135238.jpg
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று மனோஜ் பல அலுவலகங்களுக்கு வேலை தேடி செல்கிறார் எங்கும் வேலை கிடைக்கவில்லை. ஒரு அலுவலகத்தில் ஏற்கனவே பெண்களுக்கு கீழ் வேலை செய்ய மாட்டேன் என்று கூறினார். அதே அலுவலகத்திற்கு மீண்டும் செல்ல அங்கு அவரை அவமானப்படுத்தி திருப்பி அனுப்பி விட்டனர். இதற்கிடையே சுருதி ரோகினிக்கு ஆறுதல் கூறி முத்துவைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என கூறுகிறார். கூடவே ரவி பொய் சொல்ல மாட்டார் எனவும் ரோகிணியின் கணவர் போல இல்லை எனவும் கூறுகிறார். பின்னர் எதற்கு வேலை தேடி செல்ல வேண்டும் அதற்கு பதிலாக உங்கள் அப்பாவிடம் இருந்து பணம் வாங்கி பார்லர் பிசினஸில் மனோஜை சேர்த்துக் கொள்ளுமாறு கூறுகிறார். இதை ஒட்டு கேட்டுக் கொண்டிருந்த விஜயா உள்ளே வந்து அவரும் இதை ஆமோதிக்கிறார். ரோகினி ஒரு வழியாக பேசி சமாளித்து இங்கு தப்பித்து விடுகிறார்.
அதற்குப்பின் ரோகினி மனோஜ்க்காக காத்திருக்கும் பொழுது மீனா சுருதி மற்றும் ரவி வருகிறார்கள். சுருதியும் ரோகினியும் முத்துவை பற்றி தவறாக பேச மீனா கோபப்படுகிறார். அப்பொழுது விஜயா முத்துவையும் அண்ணாமலையையும் அவர்களின் டிரைவர் தொழிலையும் கேலி செய்து பேசுகிறார். இதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்த முத்து பட படவென கோபப்பட அதற்கும் அண்ணாமலை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. முத்துவை அமைதியாக இருக்குமாறு கூறுகிறார். பின்னர் இரவில் மனோஜ் வேலை எதுவும் கிடைக்காமல் வர அந்த சமயத்தில் முத்து அவரை கிண்டல் செய்துவிட்டு மீனாவிற்கு அல்வா ஊட்டுகிறார். அதற்குப்பின் சுருதியின் தாய் சுதா தொலைபேசியில் அழைத்து நாளை பொங்கல் சீர் செய்ய வருகிறேன் என கூறுகிறார்.
காலையில் செண்டை மேளத்துடன் சுதா 11 தட்டுகளை எடுத்து வீட்டிற்க்கு வருகிறார். வைர நெக்லஸ் மற்றும் புத்தாடைகளும் வாங்கி வருகிறார் விஜயா வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருக்க முத்து சுதாவின் கிண்டலுக்கு பதில் கூறுகிறார். ஏன் உங்கள் கணவர் வரவில்லை என அண்ணாமலை வினவ அதற்கும் விஜயாவே சமாளிக்கிறார். அதே சமயத்தில் மீனாவின் தாய் சந்திராவும் ஒரு தட்டை எடுத்துக்கொண்டு சீர் செய்ய வர அவரை பார்த்து சுதா கிளம்பி விடுகிறார். பின்னர் விஜயா சந்திராவை அவமானப்படுத்த முத்து பதிலடியாக என் மாமியார் வீட்டில் இருந்தாவது ஒரு கட்டு வந்திருக்கிறது ரோகிணி வீட்டில் இருந்து மலேசியாவில் இருந்து ஒரு கிண்ணம் கூட வரவில்லை என மனோஜ் மற்றும் விஜயா வாயை அடைகிறார். பின்னர் மாடியில் இதை எண்ணி வருந்தி கொண்டிருந்த ரோகினி இடம் விஜயா அவரது அப்பாவையோ மாமாவையோ வீட்டிற்கு வரவழைத்தால்தான் ரோகிணியின் கௌரவம் கூடும் எனக்கூறி பயமுறுத்துகிறார். ரோகிணி என்ன செய்வது என்பது அறியாமல் திருதிருவென முடிப்பதோடு எபிசோட் முடிவடைகிறது.