Siragadikka Aasai Today episode review 18.01.2024 | Vijay Television
Siragadikka Aasai family starts to native PC Hotstar.jpg
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று ரோகினி மலேசியாவில் இருந்து அப்பாவையோ மாமாவையோ வரவழைக்க வேண்டும் என விஜயா கூறுகிறார். ரோகிணி தன் தோழி வித்யாவிடம் சென்று பேசுகிறார். வித்யா பல கிண்டல்களுக்கு பின் ஒரு முடிவு எடுக்கிறார். அவருக்கு தெரிந்த பிரவுன் மணி எனப்படும் கசாப்பு கடைக்காரரிடம் ரோகிணியை கூட்டி செல்கிறார். இவருக்கு நடிப்பதில் ஆர்வம் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு மணிரத்தினம் கமலஹாசன் திரைப்படத்திற்கு நடிக்க வாய்ப்பு எனக் கூறி ஏமாற்றுகிறார்கள். அவரை மலேசியா மாமாவாக நடிக்கவும் வைக்கிறார்கள்.
சீர் செய்வதற்கான பணத்தேவைக்காக ரோகினி மீண்டும் சிட்டியை பார்க்கிறார். அங்கு சத்யா இவர்களை ஒளிந்து இருந்து கவனிக்கிறார். இவர்கள் மீது சந்தேகமும் படுகிறார். பின்னர் மீனா தனது தாய் சந்திராவை எதற்காக என் வீட்டிற்கு வந்தீர்கள் உங்களை அவமானப்படுத்துகிறார்கள் என்னால் அதை தாங்க முடியவில்லை என கோபப்படுகிறார். அந்த சமயத்தில் சத்யா பேசுவது அவர்களுக்கு சந்தேகம் அளிக்கிறது. பின்னர் சத்யா மீனா கொடுத்து வைத்த தங்க வளையலை திருப்பிக் கொடுக்க மீனா ஏதோ சரியாக இல்லை என உணர்கிறார்.
ரோகினியும் வித்யாவும் மீண்டும் அந்த பிரவுன் மணியை சந்தித்து அவரிடம் சீராக கொடுக்க வேண்டிய பிரேஸ்லெட் ஆடைகளை கொடுக்கிறார்கள். அவரை நேரடியாக சொந்த ஊருக்கு வருமாறும் கூறுகிறார்கள். இதற்கிடையே மனோஜ் ரோகினியை தேடிக் கொண்டிருக்க ரோகினி இனி பார்லருக்கு தொலைபேசியில் அழைக்க வேண்டாம் என கோபப்படுகிறார். குடும்பமாக அனைவரும் சொந்த ஊருக்கு கிளம்புகிறார்கள். சுருதி நிறைய யோசனைகளுக்கு பிறகு வருவதற்கு சம்மதிக்கிறார். மீனா முத்து விஜயா அண்ணாமலை இவர்கள் நான்கு பேரும் ஒரு காரிலும் சுருதி ரவி மனோஜ் ரோகினி இன்னொரு காரிலும் கிளம்புகிறார்கள்.