தமிழும் சரஸ்வதியும் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் வண்டியில் கைகளை கோர்த்துக்கொண்டு பேசி சிரித்து மகிழ்ந்து வந்தனர். இதை பார்த்த முல்லை இவர்கள் என்ன காதலிக்கிறார்களோ என்று யோசித்தார். பின் மீனாவை அழைத்து அவரையும் பார்க்க வைத்தார் முல்லை. பின் அதை கண்டுகொள்ள வேண்டாம் என்று கூறி திரும்பினர். சற்று நேரத்தில் மழை அதிகம் ஆனது. நமச்சிக்கு கடலோர பகுதிகள் புயல் எச்சரிக்கை விட்டிருப்பதாக கூறினர். தமிழுக்கும் அந்த தகவல் வந்தது. கடல் அருகில் யாரும் வர வேண்டாம் என்று எச்சரிக்கை வந்திருப்பதாக கூறினார். பின் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்று கூறி வண்டியை வீட்டிற்கு திருப்பினார். பின் வீட்டில் அனைவரும் அவர்களது ஜோடிகளுடன் தங்கள் பயணம் நின்று போனதை நினைத்து வருந்தினார்கள். பின் நாளை வேறு எதும் திட்டம் போட்டுகொள்ளலாம் என்று மனதை தேத்தினார்கள். சரஸ்வதி தமிழ் இருவரும் பேசுவதை ஜீவா மீனா இருவரும் பார்த்து அவர்களை விசாரித்தனர். அவர்களும் நடந்த அனைத்தையும் எடுத்து கூறினர். தங்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார் சரஸ்வதி. அவர்களும் அதற்கு சம்மதித்தார்கள். அடுத்து என்ன நடந்தது என்று அறிய காணொளியை பார்க்க…