Tamizhum Saraswathiyum Serial Today Episode | 07.12.2021 | Vijaytv
tamizhum Saraswathiyum.07.12.2021
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் தன் அம்மா சரஸ்வதி M.B.A படித்து இருப்பதாக நினைத்து தான் இந்த திருமண ஏற்பாடு செய்வதாக கூறினார். இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சொக்கலிங்கம், எதற்காக பொய் சொல்ல வேண்டும் என்று கேட்டார். தமிழும் அம்மாவின் விருப்பம், நடந்தவை அனைத்தையும் கூறினார். இதனால் மீண்டும் கோபம் அடைந்த சொக்கலிங்கம் வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். என் மாணவர்களுக்கு பொய் சொல்ல கூடாது என்று கூறி வளர்க்கும் என்னிடம் பொய் சொல்ல சொன்னால், அதெல்லாம் முடியாது என்று முடிவாக கூறினார். இதனால் வருத்தத்தில் தமிழ் வீட்டை விட்டு கிளம்பினார்.கோதை தமிழுக்கு பொண்ணு பார்க்கும் விஷயத்தை சந்திரகலாவிடம் கூற அவரது வீட்டுக்கு வந்தார். கோதையும் தான் சரஸ்வதியை தான் தமிழுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து இருப்பதை கூறினார். இதை கேட்டதும் வசு மிகவும் சந்தோசம் அடைந்தார். ஆனால் சந்திரகலா வெளியில் சொல்ல முடியாமல் எரிச்சல் அடைந்தார்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….