தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி ராகினியிடம் அர்ஜுன் உனக்கு நண்பனா என்று விசாரித்தார். மேலும் அதை தாண்டி உங்களுக்குள் எதேனும் பழக்கம் உண்டா எனவும் கேட்டார். ஆனால் ராகினி அதெல்லாம் எதுவும் இல்லை, அவர் எனக்கு நண்பன் மட்டுமே என்று கூறினார். பின் தமிழ் இடம் சரஸ்வதி நடந்ததை கூறினார். ராகினியுடன் எடுத்த புகைப்படத்தை அர்ஜுன் வால்பேப்பரில் வைத்து இருந்தார் என்பதையும், ராகினி அர்ஜுன் பற்றி பேசினால் வேறு விதமாக நடந்து கோவதையும் கூறினார். ஆனால் ராகினி அவர்கள் வெறும் நண்பர்கள் தான் என்று கூறியதாக கூறினார். இதனால் தமிழும் சற்று குழப்பம் அடைந்தார். ஆனால் அம்மா என்ன முடிவு எடுப்பார்கள் என்று பார்த்து பின்னர் நாம் இதை பற்றி யோசிக்கலாம் என்று கூறினார். அடுத்த நாள் பேங்க்குக்கு தமிழ் மற்றும் கார்த்திக் சென்றார்கள். அவர்கள் பார்த்த மேனஜர் அங்கு இல்லை என்று தெரிய வந்தது. பின் அங்கு இருந்தார் இடம் இந்த கடன் விஷயமாக கேட்டார்கள். ஆனால் அவர்களுக்கு தர வேண்டிய பனம் ஏற்பாடு ஆகவில்லை என்று கூறினார்கள். இதனால் கோவம் கொண்டார் கார்த்திக். நாளை நம் கம்பேனியில் அனைவருக்கும் தீபாவளி போனஸ் கொடுக்க வேண்டும். சம்பளம் போட வேண்டும் ஆனால் இப்போது பணம் இல்லை என்றால் என்ன செய்வது என்று புரியாமல் நின்றார் கார்த்திக். மேலும் மற்ற பேங்க்களிலும் முயற்சி செய்து பார்த்தார். ஆனால் 3 கோடி மிகப் பெரிய தொகை என்பதால் உடனே தர வாய்ப்பு கம்மி என்று தன் கூறினார்கள். கோதை நடேசன் என்று அனைவரும் அவர்களுக்கு தெரிந்த ஆட்களிடம் முடிந்த வரை பணம் ஏற்பாடு செய்ய முதிர்ச்சி செய்தார்கள். இருவரும் உடனே தர முன் வரவில்லை. அதே நேரம், ஆதி வேண்டும் என்றே அந்த பேங்க் மேனஜரை அவர் பணம் கொடுத்து வேலைக்கு செல்லவிடாமல் வைத்து இருந்தார். இதனால் வீட்டில் ஒரே குழப்பமாக இருந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…