Tamizhum Saraswathiyum Today Episode | 01.02.2022 | Vijaytv
Tamizhum Saraswathiyum.01.02.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி கையில் வைத்து இருந்த மருதாணி எப்படி சேவந்து இருக்கிறது என்று பார்க்க அனைவரும் ஆவலாக இருந்தார்கள். சரஸ்வதியும் எல்லாருக்கும் தன் கையில் சிவந்த மருதாணியை காட்டி மகிழ்ந்தார். மருதாணியின் செவப்பை வைத்து தமிழ் சரஸ்வதி இருவரையும் கேலி கிண்டல் என மண்டபம் களை கட்டியது. சரஸ்வதியை தன் உறவினர்களிடம் அறிமுகம் செய்தார் கோதை. அப்போது சரஸ்வதி M.B.A படித்து இருப்பதாக கூறினார். இதனால் சரஸ்வதிக்கு உறுத்தலாக இருந்தது. வந்தவர்களும் சரஸ்வதியின் அழகு, படிப்பு பண்பு என அனைத்தையும் பாராட்டினார்கள். இதை பார்த்த சொக்கலிங்கத்தின் உறவினர் ஒருவர் சந்தேகம் கொண்டார். சொக்கலிங்கத்திடம் நேரடியாக வந்து கேட்கவும் செய்தார். சரஸ்வதியின் படிப்பு விஷயம் பற்றி மாப்பிள்ளை வீட்டுக்கு தெரியாதா என்று கேட்டார். ஆனால் வாசுகி அதற்கு ஏதேதோ சொல்லி சமாளித்தார். உடனே மீண்டும் சொக்கலிங்கத்திற்கு படபடப்பு அதிகரித்தது. தன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அருண் இடம் கூறினார். மண்டபத்தில் வேறு யாருக்கும் தெரியாமல் கிளம்பினார்கள். பின் சபையில் சம்பந்த வீடுகள் அனைவரும் அமர்ந்து சம்பர்தாயப்படி பேச வேண்டும் என்று கூறினார்கள். அப்போது கோதை அவர்கள் 50 பவுன் நகை மற்றும் கல்யாணத்தில் பாதி செலவு சரஸ்வதி வீட்டில் தான் என்று கூறினார். அந்த நேரம் பார்த்து சந்திரகலா குழப்பம் செய்ய நினைத்தார். சரஸ்வதியை பார்க்க ஒருவன் வீட்டு சேவுறு ஏறி குதித்தது, அதை தமிழ் காப்பாற்றியது. பின் ஏற்கனவே திருமண ஏற்பாடுகள் செய்து, அந்த மாப்பிளை கெட்டவன் என்று கண்டு பிடித்து தமிழ் காப்பாற்றியது என எல்லாவற்றையும் சபையில் கூறினார். கடைசியில் தமிழ் சரஸ்வதி இருவரும் காதலிப்பதையும் கூறி முடித்தார். அதற்கு கோதை என்ன பதிலளித்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….