Tamizhum Saraswathiyum Today Episode | 01.03.2022 | Vijaytv
Tamizhum Saraswathiyum.01.03.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை இந்த வீட்டில் தான் தமிழ் சரஸ்வதி இருவரும் இருக்க வேண்டும் என்று கூறினார். வசுந்தரா உடனே அழைத்து தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சீர் வரிசை உடன் கோதை வீட்டிற்க்கு வந்து சேர்ந்தார்கள். வசு அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்து சரஸ்வதியை விளக்கு ஏற்ற வைத்தார். பின் பால் பழம் கொடுத்து உபசரித்தார். சந்திரகலா இதெல்லாம் பார்த்து வெறுப்பாக பார்த்தார். கோதை வந்தவர்களை அழைத்து அமர வைத்து பேசினார். அப்போது சந்திரகலா இருந்தால் அது நல்லது இல்லை என்று நினைத்து அவரை கிழம்பும்படி செய்தார். இது வரை நீங்கள் செய்த அனைத்து உதவிக்கும் நன்றி, இனிமேலும் உங்களுக்கு சிரமம் கொடுக்க விருப்பம் இல்லை என்று கூறினார். அதனால் உங்கள் வேலையை பாருங்கள் என்று மறைமுகமாக கூறினார். உடனே சந்திரகலா தன்னை வீட்டை விட்டு கிளம்ப சொல்லி என்ன அவமான படுத்தியதாக நினைத்து கோவத்தில் கிளம்பினார். அவர் சென்றவுடன் சரஸ்வதி கழுத்தில் இருந்த நகை அனைத்தையும் கழட்டி வைக்குமாறு கூறினார் கோதை. சரஸ்வதியும் அதை உடனே கழட்டி வைத்தார். அந்த நகை, சீர் அனைத்தையும் எடுத்துகொண்டு சொக்கலிங்கம் குடும்பத்தை கிளம்ப சொன்னார். இனி அந்த குடும்பத்திற்கும் கோ எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். இனி யாரும் இந்த வீட்டுக்கு வரவும் கூடாது, நாங்களும் வர மாட்டோம் என்று கோதை கோவமாக பேசினார். உடனே வாசுகி, மீனு பாட்டி அனைவரும் மன்னிப்பு கேட்டார்கள். ஆனால் அதை கோதை கேட்கும் நிலையில் இல்லை. சொக்கலிங்கம் தான் செய்த தவறுக்கு இது தான் எனக்கு கிடைத்த தண்டனை என்று கூறி கிளம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….