தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அர்ஜுன் செய்த தவறை ஆதாரத்துடன் அவரிடம் கேட்டார். இந்த அளவுக்கு நீ மட்டமான வேலை செய்து, யாருக்கும் தெரியாமல் இப்படி ஒரு திருட்டு வேலை செய்து இந்த கம்பேனியை அபகரிக்க பார்க்கதே என்று எச்சரித்தார். மேலும் இந்த திருட்டுத்தனத்தை உடனே தன் அப்பா அம்மாவிடம் கூற போவதாக கூறினார். ஆனால் அர்ஜுன் தான் செய்தது தவறு தான், ராகினியை அரக்கோணம் ஹாஸ்பிடலுக்கே வேலைக்கு செல்லட்டும். நானும் இந்த அம்பாத்தூர் கம்பேனியை பார்த்துக்கொண்டு ராகினியோடு நிம்மதியான வாழ்க்கை வேண்டும் என்று காலில் விழுந்து கெஞ்சினார். அதனால் தமிழும் அவரை மன்னித்து தன் தங்கையின் வாழ்க்கை வீணாக கூடாது என்று நினைத்து அவரை மன்னித்தார். ஆனால் அர்ஜுன் மீண்டும் தமிழை இந்த வீட்டை விட்டு விரட்டினால் தான் தன் திட்டம் பலிக்கும் என்று நம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….