Tamizhum Saraswathiyum Today Episode | 01.04.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியை கோவிலுக்கு அழைத்தார். சரஸ்வதிக்கு தமிழ் மேல் பயங்கர கோவம். நம் பிறந்த வீட்டு நபர்களை பார்க்க இவளோ போராட்டமா என்று வருத்தமாக இருந்தார். பின் தமிழ் உடன் கோவிலுக்கும் கிளம்பினார். கோவிலுக்கு சென்ற பின் அங்கு ஏற்கனவே சரஸ்வதியின் பாட்டி மற்றும் தம்பி தங்கை வந்து இருந்தார்கள். அவர்களை பார்த்த சரஸ்வதி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். தமிழ் காலையிலே அழைத்து கோவிலுக்கு வர சொன்னார் அதன் கிளம்பி வந்தது விட்டேன் என்று பட்டி கூறினார். உடனே தமிழை தவறாக நினைத்து விட்டோம் என்று வருந்தினார் சரஸ்வதி. பின் பாட்டி உடல் நிலை பற்றி விசாரித்தார். பாட்டி தமிழ் இல்லாத நேரத்தில் சரஸ்வதியை இனியும் அடங்கி இருக்க வேண்டாம். திருமணத்துக்கு முன் வீட்டில் எப்படி சுட்டியாக இருந்தாயோ அதே போல் மாரு என்றார். பின் அடுப்பங்கறையை உன் பொறுப்பில் எடு என்றார். இதை சரஸ்வதியும் பொறுமையாக கேட்டுக்கொண்டார். சந்திரகலா சரஸ்வதியின் பரிட்சை எழுதிய பேப்பரை எப்படியும் ஃபெயில் ஆக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். அதற்காக ஒருவருக்கு 7 லட்சம் பணமும் கொடுத்தார். அந்த நபரும் பணத்தை வாங்கிக் கொண்டு சரஸ்வதிக்கு ஃபெயில் போட்டு விடுவதாக கூறினார். கோதை மற்றும் நடேசன் இருவரும் நடந்தது வருவதை பார்த்த சரஸ்வதியின் பாட்டி இறங்கி வந்து சண்டை போட்டார். அப்படி என்ன நடந்தது? காணொளியை பார்க்க…