Tamizhum Saraswathiyum Today Episode | 01.06.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 01.06.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் தன்னால் தான் இந்த பிரச்சனை, தன்னால் நம்மிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் வேலை போய் விடுமோ என்று பயந்தார். அவர்களுக்கு வேலை இல்லாமல் போய் விடுமோ? நம் கம்பேனி நிலமை தலைகீழாக மாறிவிடுமோ என்று வருத்தத்தில் இருந்தார். ஆனால் அவரை சரஸ்வதி ஊக்க படுத்தி எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று கூறினார். அடுத்த நாள் கம்பேனியில் மீட்டிங் நடக்க போவதை எதிர் பார்த்து இருந்தார்கள். தமிழ் கார்த்திக்கை பார்த்து எப்படியாவது பொறுமையாக பேசி இந்த வேலையை நமக்கே கிடைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் கார்த்திக் எதோ வேண்டா வெறுப்பாக இருந்தார். பின் மீட்டிங் தொடங்கியது. கார்த்திக் பேச ஆரம்பித்தார். ஆனால் பேசும்போது இவளோ சின்ன ஆட்களை வைத்து எப்படி எங்கள் வேலையை முடித்து தர முடியும் என்று கேட்டார். அதற்கு கார்த்திக் பதில் சொல்லாமல் கோவம் கொண்டார். மேற்கொண்டு கோவத்தில் வார்த்தைகளை விட ஆரம்பித்தார். இதனால் தமிழ் தானே பேசுவதாக முன் வந்து பேசினார். அவரது கம்பேனி எந்த நிலையில் இருந்து இப்படி ஒரு நிலைக்கு வந்தது என்று எடுத்து கூறினார். மேலும் இந்த வேலை பார்ப்பதை இவளோ பெரிய விஷயமாகா நினைப்பது, கம்பேனியின் கொள்கை என அனைத்தயும் எடுத்து கூறினார். அவரும் அதை பொறுமையாக கேட்டார். பின் மீட்டிங் முடிந்தது. கார்த்திக் ஒரு வியாபார விஷயமாக மீட்டிங் நடந்தால் அதில் இப்படி பேசி, அழுது, புலம்பி நாடகம் போடுவது எரிச்சல் தான் வரும் என்று கூறினார். கோவத்தில் வீட்டுக்கு கிளம்பினார். வீட்டில் அனைவரும் என்ன நடந்தது என்று விசாரித்தார்கள். ஆனால் கார்த்திக் இந்த டீலிங் மட்டும் அல்ல வேறு எதுவுமே நமக்கு கிடைக்காது அந்த அளவுக்கு தமிழ் பேசிவிட்டதாக கூறினார். இதனால் கோதை மனம் உடைந்து போனார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…