தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா வீட்டில் நடந்ததை சரஸ்வதிக்கு அழைத்து கூறினார். வீட்டில் இருந்த குழப்பம் அனைத்தும் சரஸ்வதியால் தான் இது தீர்ந்தது என்று கூறினார். ஆனால் சரஸ்வதி தனக்கு நடந்ததை வசுந்தராவிடம் கூறினார். தமிழின் இந்த நடவடிக்கை மாறியது குறித்து வருத்தம் கொண்டார். இதை கேட்ட வசு அடுத்த நாளே தமிழ் கம்பேனிக்கு ஒரு நேர்காணல் நடத்த ஆட்களை அழைத்து வந்தார். பெண்கள் பல துறையில் வேலை செய்யும் போது அவர்களது உறவினர்கள் எப்படி அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள வந்ததாக கூறினார்கள். அப்போது தமிழ் வாயலே பெண்கள் வேலைக்கு செல்வது அவர்களது சுதந்திரம் அதில் யாருமே தலையிட முடியாது என்று கூறினார். மேலும் வசுந்தரா என் மாமா மற்றும் சரஸ்வதி இருவரும் ஒருவருக்கு ஒருவர் இவளோ விட்டுக்கொடுத்து போவார்கள் என்று பெருமையாக கூறினார். அதை எல்லாம் கேட்டு தமிழ் வருந்தினார். ஆனால் தமிழ் கோவமாக இருப்பதை பார்த்து சரஸ்வதி இனி வேலைக்கு போக மாட்டேன் என்று கூறினார். அதே நேரம் அர்ஜுன் சட்டையில் இருந்த ஒரு பட்டன் காணவில்லை என்று ராகினி அர்ஜுன் இடம் கேட்டார். அதற்கு அவரும் சரியாக தெரியவில்லை என்று பதில் கூறினார். ஆனால் நடேசன் அவரது அறையில் இருந்து அவரது பட்டனை எடுத்து வந்து கொடுத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…