Tamizhum Saraswathiyum Today Episode | 01.07.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தான் கார்த்திக் இடம் கடுமையாக பேசியதை நினைத்து வருந்தினார். தமிழ் அடுத்து என்ன செய்வது? எப்படி அம்மா மனதை மாற்றி சரஸ்வதியை படிக்க அனுப்புவது என்று யோசித்தார். மேலும் சரஸ்வதியை படிக்க வைத்தே ஆக வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அதற்காக எதை வேணாலும் செய்வேன் என்று முடிவு எடுத்தார். அடுத்த நாள் காலையில் அனைவரும் சேர்ந்து சாப்பிடும்போதும் தமிழ் தனக்கு சாப்பாடு இனி வீட்டில் வேண்டாம் என்றார். இதை கேட்ட கோதை அதிர்ச்சி அடைந்தார். காரணத்தை கேட்டார். சரஸ்வதியை படிக்க அனுமதி கொடுத்தால் மட்டுமே மீண்டும் சாப்பிடுவேன் என்று கூறினார். சரஸ்வதியும் அதற்கு தமிழ் பக்கம் நின்றார். கோதைக்கு மேலும் கோவம் அதிகமானது. இருவரும் சேர்ந்து தன்னை மிரட்டுவதாக நினைத்தார். ஆனால் தமிழ் அவர் முடிவில் உறுதியாக இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author