Tamizhum Saraswathiyum Today Episode | 01.09.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் பாட்டி வீட்டுக்கு வந்ததும் உடனே சரஸ்வதியை அவரது மாமியார் வீட்டுக்கு செல்லும்படி கூறினார். அது தான் உன் வீடு, அதற்கு மேல் இங்கு தாங்குவது நல்லது இல்லை என்றார். தமிழ் இடம் வேண்டா வெறுப்பாக பேசினார். பின் அவர் நால்துக்கு தன சொல்லி இருப்பார் என்று தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள். பின் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் கோதை வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்ததும் சுமங்கலி பூஜை ஆரம்பம் ஆனது. ஆனால் வீட்டுக்கு வந்தவர்கள் என்ன மூத்த மருமகள் இப்படி பொறுப்பு இல்லாமல் கடைசி நிமிடத்தில் வந்து பூஜையில் கலந்து கொள்கிறார் என்று பேசினார்கள். அதை தாண்டி பூஜை நல்லபடியாக முடிந்தது. அதே நேரம் சந்திரகலா மது வீட்டுக்கு வந்து இருந்தார். அங்கு mdhu தனக்கு நடந்த அவமானத்தை நினைத்து உறைந்து போய் நின்றார். அதை பார்த்த சந்திரகலா வேண்டும் என்று மதுவை மேலும் கோவப்படும் வகையில் பேசினார். உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியதே அந்த தமிழும் சரஸ்வதியும் தான். உன் இடத்தில் நான் இருந்து இருந்தால் கண்டிப்பாக நான் அவர்களை சேர்ந்து வாள விடவே மாட்டேன் என்று மதுவை உசுப்பேற்றினார். கம்பேனியில் மேலும் ஒரு சிக்கலை அர்ஜுன் சரி செய்தார். அங்கு இருக்கும் ஒவ்வொரு சிக்கலாக சரியாக கையாண்டு தீர்க்கிறார் என்று அனைவரும் பாராட்டினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author