Tamizhum Saraswathiyum Today Episode | 01.12.2021 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா முதல் இரவு அறைக்குள் வந்ததும், கார்த்திக் முத்த்தில் சிரிப்பு இல்லை. எதையோ யோசித்துக்கொண்டே இருந்தார். வசுந்தரா அவர் மனதில் இருக்கும் ஆசை, பயம், திருமணம் முடிந்த விஷயம் அனைத்தையும் பற்றி பேசினார். ஆனால் கார்த்திக் எதையும் கண்டுகொள்ளவில்லை. பின் மகாபலிபுரத்தில் நடந்த உண்மையை கூறும்படி கேட்டார். வசுவும் உண்மையை மறைக்க முடியாமல் நடந்ததை கூறினார். அதை கேட்டதும் கார்த்திக் இன்னும் கோபம் அடைந்தார். கோவத்தில் வசுவை திட்டினார். எப்படி இந்த மாதிரி ஒரு காரியம் உன்னால் செய்ய முடிந்தது என்று வருந்தினார். பின் தன்னுடன் பேச கூடாது என்று கூறி படுத்துவிட்டார். இதனால் மிகவும் வருத்தத்தில் இருந்தார் வசு.தான் செய்த வேலையால் சண்டை வந்ததா என தெரிந்து கொள்ள கீதா கோதை வீட்டிற்கு வந்தார். வசுந்தராவின் முகத்தை பார்த்து சண்டை நடந்து இருக்கும் என்று முடிவு செய்தார்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author