Tamizhum Saraswathiyum Today Episode | 02.03.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் நகைகளை எல்லாம் கழட்டி வைக்க சொன்னார் கோதை. பின் நகைகளை எடுத்துக்கொண்டு சொக்கலிங்கத்தை கிளம்பச் சொன்னார். இனி இந்த வீட்டுக்கும் அந்த வீட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினார். இனி ஒட்டு உறவுமில்லை என்றார் கோதை. உடனே சொக்கலிங்கம் தான் செய்த தவறை உணர்ந்து இதை தண்டனையாக ஏற்றுக்கொண்டார். சரஸ்வதி தன் அப்பாவுக்கு மிகப் பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியதை நினைத்து வருந்தினார். சரஸ்வதியின் பாட்டி சரஸ்வதிக்கு அறிவுரை கூறினார். பின் சரஸ்வதி வீட்டில் எல்லாரும் கிளம்பினார்கள் வீட்டுக்கு. வசுந்தரா மட்டும் தமிழ் சரஸ்வதி இருவரையும் ஆறுதலாக பேசினார். அவர்களுக்கான அறையை ஏற்பாடு செய்து கொடுத்தார் வசுந்தரா. பின் வசுந்தராவை சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடு செய்ய வில்லையா என்று மறைமுகமாக கோதை இடம் கேட்டார். அதையும் ஜோசியரை பார்த்து ஏற்பாடு செய்வதாக கூறினார் கோதை. தமிழ் சரஸ்வதி இருவருமே நடந்ததை நினைத்து வருந்தினார்கள். கோதைக்கு தெரியாமல் நடேசன் சொக்கலிங்கத்தின் வீட்டு பத்திரத்தை எடுத்து வந்து கொடுத்தார். இந்தக் குடும்பமே வேண்டாம் என்றபின் பத்திரம் மட்டும் எதற்கு என்று பத்திரத்தை திருப்பி தந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…..

About Author