Tamizhum Saraswathiyum Today Episode | 02.11.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினி அவர் மனதில் அர்ஜுன் தான் இருக்கிறார் என்பதை தெளிவாக கூறினார். இதை கேட்ட தமிழ் கண்டிப்பாக இதை அம்மாவிடம் சொல்லி உங்கள் திருமணத்தை நடத்துவேன் என்று கூறினார். பின் சந்திரகலாவை பார்த்து விஷயத்தை கூறி முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ராகினி மற்றும் அர்ஜுன் இருவருமே ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் அதனால் இந்த திருமணத்தை நிறுத்துமாறு கூறினார். ஆனால் சந்திரகலா அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. கோதை எனக்கு சத்தியம் செய்து கொடுத்தார், அதன்படி எனக்கு இந்த திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்று கூறினார். தமிழுக்கு சந்திரகலாவின் திட்டம் தெரிய வந்தது. அர்ஜுனை காதலித்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, இப்போ உள்ள பிள்ளைகள் காதலிப்பவரையே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று அவசியம் இல்லை என்பது போல் பேசினார். பின் தமிழ் வீட்டுக்கு வந்து கோதை நடேசன் மற்றும் குடும்பத்தில் அனைவர் முன்னிலையிலும் வைத்து ஆதி ராகினி திருமணம் நடக்க வேண்டாமா என்று கூறினார். ராகினி அர்ஜுன் இருவரும் காதலிப்பதாகவும் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author