தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சேர்ந்து திருமணத்திற்கு முன் காதலர்களாக தனியாக எங்காவது சென்று சுத்தி பார்க்கும்படி மின்னல் மற்றும் நமச்சி கூறினார்கள். சரஸ்வதியும் தயங்கினார். ஆனால் தமிழும் போய் வரலாம் என்று கூறினார். பின் இருவரும் வண்டியில் கிளம்பி கடற்கரைக்கு சென்றார்கள். அங்கு சென்று தனியாக இருவரும் பேசி மகிழ்ந்தார்கள். அங்கு நடக்கும் அனைத்தையும் பார்த்து ரசித்தார்கள். பின் கடலிலும் நனைந்து விளையாடினார்கள். பின் நேரம் ஆனதும் கிளம்பலாம் என்று உடனே வீட்டிற்க்கு திரும்பினார்கள். தமிழ் வீட்டிற்குள் வந்ததும், ராகினி தமிழ் காலில் மண் இருப்பதை பார்த்தார். உடனே சரஸ்வதி அண்ணியுடன் பீச்க்கு போனியா என்றும் கேட்டார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் நின்றார் தமிழ். பின் கோதையே அதெல்லாம் ஒரு தப்பும் இல்லை. நான் பார்த்த பெண்ணை அவன் திருமணம் செய்யப்போகும் பெண்ணை அழைத்து செல்வதில் எந்த தவறும் இல்லை என்று கூறினார். தமிழ் எப்போதும் பொய் சொல்ல மாட்டான். அவனுக்கு சொல்லவும் வராது என கூறினார் கோதை. அதை கேட்டதும் தமிழ் மீண்டும் குற்றஉணர்ச்சியில் வாய் அடைத்து நின்றார்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…