தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் இடம் சந்திரகலா தனது ஆதரவு எப்போதும் இருக்கும் என்று கூறினார். அதை கேட்டதும் கார்த்திக் தனக்காக ஒருவர் ஆதரவாக பேசுவதை பார்த்து ஆச்சரியப்பட்டார். அடுத்த நாள் அர்ஜுன் எதுவுமே தெரியாதது போல் கார்த்திக் இடம் இந்த கடன் கிடைத்து விட்டதா என்று விசாரித்தார். கார்த்திக் தன் மாமியார் பணம் தருவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி இருப்பதை கூறினார். அதை கேட்டதும் அர்ஜுன் தனது திட்டம் வேலை செய்கிறது என்று மகிழ்ச்சி அடைந்தார். அவரே கடன் ஏற்பாடு செய்தால் கண்டிப்பாக நீ அந்த கம்பேனியை வாங்கலாம் என்று கூறினார். ஆனல் கார்த்திக் தனக்கு அந்த கம்பேனியைவாங்க விருப்பம் இல்லை என்று கூறினார். அதை கேட்டதும் அர்ஜுன் அதிர்ச்சி அடைந்தார். என்ன கார்த்திக் மனதில் இப்படி ஒரு எண்ணம் எப்படி வந்தது என்று யோசித்தார். மீண்டும் அதை களைத்து அவரை மாற்ற வேண்டும் என்று நினைத்தார். அதற்காக என்ன பிரச்சினை எதற்கு இந்த பின்னடைவு என்று கேட்டார். ஆனல் கார்த்திக் தனக்கு விருப்பம் தான், ஆனால் இதை அம்மா, அப்பா, அண்ணன் யாருமே இல்லாமல் தனியாக நான் மட்டுமே வாங்கி எனக்கு எந்த சந்தோசமா இருக்கப்போவது இல்லை என்றார். மேலும் இப்படிப்பட்ட மகிழ்ச்சி எனக்கு தேவையும் இல்லை என்று கூறினார். அதனால் நான் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை என் சம்பளத்தில் எடுத்துக்கொள்ளப்படும். எனக்கு அந்த கம்பேனி வேண்டாம் என்று கூறினார். இப்படி கார்த்திக் மாறுவார் என்று சற்றும் எதிர்பார்க்காத அர்ஜுன் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தார். உடனே அந்த கம்பேனி ஓனரை பார்த்து பேசினார். கார்த்திக்கை அழைத்து மிரட்டினால் தான் இனி வேலை நடக்கும் என்று கூறினார். மேலும் பிரச்சனையை பெரிதாக்கினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…