Tamizhum Saraswathiyum Today Episode | 03.02.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum.03.02.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலாவின் செயலை பார்த்து வசுந்தரா தன் அம்மா ஒரு பெரிய குழப்பத்தை தீர்த்து வைத்துவிட்டார் என்று நினைத்தார். அதனால் தன் அம்மாவுக்கு நன்றியும் கூறினார். ஆனால் கார்த்திக் இவர் செய்வது எதுவும் சரி இல்லை என்று உணர்ந்தார். அதை நேரடியாகவும் கேட்டார். ஆனால் சந்திரகலா அதெல்லாம் ஒன்றும் இல்லையே என்றார். இந்த விஷயம் தெரிந்த அப்போவே இதை அம்மாவிடம் தனியாக கூறி இருக்கலாம், ஆனல அதை செய்யாமல் சபையில் வைத்து இதை சொல்லி அம்மாவை அசிங்கப்படுத்தி இந்த திருமணத்தையும் நிறுத்த திட்டம் போட்டு செய்து இருப்பது எனக்கு தெரியும் என்றார். ஆனால் சந்திரகலா அதை மறுத்தார். இனியும் இந்த திருமணத்தில் எதாவது பிரச்சனை செய்ய நினைத்தால் நடப்பதே வேறு என்று எச்சரித்தார். கார்த்திக் இப்படி பேச தமிழ் தான் காரணம் என்று நினைத்துக்கொண்டார். பின் அடுத்த திட்டத்தை ஆரம்பித்தார். சரஸ்வதிக்கு பார்த்த பழைய மாப்பிளை ஷ்யாமை அழைத்து பேசி வர வைக்க வேண்டும் என்று கூறினார். இதற்கிடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அங்கு வந்து சேர்ந்தது. கோதை சொக்கலிங்கம் அனைவரும் அவர்களை வரவேர்தார்கள். பின் தாய் மாமன் வீட்டு சீர் செய்வதாக மோதிரம் வாங்கி வந்து இருந்தார்கள். அதை மாணிக்கம் கையாலே செய்ய வைத்தார்கள். பின் மணமக்களை வாழ்த்துவது ஆட்டம் பாட்டம் என்று கும்மாலமாக இருந்தது. கீதா இந்த இடத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசனையாக இருந்தார். அடுத்து என்ன நடந்தது? கீதா தப்பிதாரா? காணொளியை பார்க்க…