தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவருக்கும் சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வசுந்தரா கூறினார். அதற்கு கோதை ஜோசியரை அழைத்து பேசி நல்ல நேரம் குறித்தார்கள். பின் வசுந்தரா தமிழ் சரஸ்வதியை தயார் ஆகும்படி கூறினார். குளித்து தயார் ஆக சொன்னார். அவர்கள் குழப்பத்தில் பார்த்தார்கள். ஆனால் வசுந்தரா தான் சொல்வதை நம்புங்க, அத்தை தான் இந்த ஏற்பாடுகளை செய்ய சொன்னாங்க என்றார். அதை கேட்டதும் தமிழ் சரஸ்வதி இருவருமே குழப்பம் அடைந்தார்கள். சந்திரகலாவுக்கு இந்த வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் எரிச்சல் அடைந்தார். உடனே வசுந்தராவுக்கு அழைத்து பேசினார். வாசு நடந்ததை கூறினார். உடனே சந்திரகலா கோபம் அடைந்தார். நாம் இவளோ செய்தும் என்னை அசிங்கபடுத்திவிட்டு தமிழ் சரஸ்வதி வாழ்கையை ஆரம்பிக்க போராங்களா என்று பொங்கினார். வசு தான் இவை அனைத்தயும் ஏற்பாடு செய்கிறார் என்று தெரிந்ததும் அதற்கும் கோபப்பட்டார். ஆனால் இது எதிலும் கார்த்திக்கிற்கு விருப்பம் இல்லை என்று வசுந்தரா கூறினார். தமிழ் மீது மிகுந்த கோவத்தில் கார்த்திக் இருப்பதாக கூறினார். இதை கேட்டதும் தனக்கு இதை வைத்து சாதகமாக காய் நகத்தப்போவதாக யோசித்தார். அந்த திட்டத்தை கீதாவிடம் கூறினார். சரஸ்வதி வீட்டில் இருந்து மின்னல் சரஸ்வதிக்கு அழைத்து பேசினார். இங்கு நடக்கும் விஷயங்களை கேள்வி பட்டு வீட்டில் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…