தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் இப்போது மருத்துவமனையில் இருந்து வந்ததும் அவரை அவர் அறையில் கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கும்படி அனுப்பி வைத்தார்கள். மேலே சென்ற சரஸ்வதி, தமிழ் மற்றும் நமச்சி மூவரும் அறைக்கு வந்ததும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். நமச்சி மற்றும் பாட்டியின் திட்டம் தான் இது என்று கூறினார்கள். மேலும் அவர்களின் நடிப்பு அனைத்தும் அசத்திவிட்டீர்கள் என்று பெருமையாக பார்ட்டிகொண்டார்கள். எப்படியும் இந்த திட்டத்தில் நாம் ஜெய்த்து விடலாம் என்று நமச்சி உறுதியாக கூறினார். அடுத்து கோதை என்ன நினைப்பார், அடுத்து என்ன செய்வார் என்று எனக்கு எல்லாம் தெரியும் என்றார் நமச்சி. அதனால் அதற்கான வேலைகளை ஆரம்பிக்க கிளம்பினார். நமச்சி கிளம்பியதும் கோதை மனது சரி இல்லை என்று கூறினார். நடேசன் இடம் கோவிலுக்கு போகலாம் என்றார். நடேசன் தமிழையும் அழைத்து சென்று ஒரு அர்ச்சனை செய்யலாம் என்று கூறினார். உடனே தமிழும் கிளம்பினார். ஆனால் சரஸ்வதியும் தன்னுடன் வரட்டும் என்று கூறினார். பின் கோதை அதற்கு சம்மதித்தார். கோவிலுக்கு சென்று சாமி கும்பிடும்போது அங்கு வந்த அனைவரும் சித்தர் ஒருவர் வந்து இருப்பதாக பேசிக்கொண்டார்கள். அவர்களின் மகிமை பெரிய நம்பிக்கை கொடுக்கும், நடந்தது மற்றும் நடக்க போவது என்று அனைத்தையும் கூறுவார் என்று காசு கொடுத்து நமச்சி பேச வைத்து இருந்தார். அதையும் நடேசன் மைரும் கோதை நம்பினார்கள். பின் கோதையை அழைத்து பேசினார் சித்தர். நீ பெரிய தவறு செய்கிறாய் என்றார். நீ செய்யும் தவறினால் தன் உன் மகனை தோஷம் தொடருகிறது என்று கூறினார். உன் வீட்டுக்கு வாழ வந்த பெண்ணுக்கு நீ சரியான சடங்கு சம்பார்தாயம் செய்யவில்லை என்று கூறினார். மேலும் சரஸ்வதிக்கு தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு செய்தால் தான் தமிழின் தோஷம் நீங்கும் என்றார். அதுவும் அவரின் பிறந்த வீட்டு சீர் கொண்டு வந்துதான் செய்ய வேண்டும் என்றார். மேலும் மருமகளை பால் காயவைத்து வீட்டில் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்றார். அதை கேட்ட கோதை அதிர்ச்சி அடைந்தார். என்ன செய்வது என்று புரியாமல் நின்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…