Tamizhum Saraswathiyum Today Episode | 03.06.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 03.06.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அவர் சொன்ன திட்டப்படி சரியாக நடந்தால் எல்லாம் கை கூடி வரும் என்று கடவுளை வேண்டிக்கொண்டு வேலையை ஆரம்பித்தார்கள். சரஸ்வதி தமிழின் திறமை வெளியே வர வேண்டும் என்று வேண்டினார். தமிழ் தனக்காக வேலை பார்க்கும் 200 குடும்பங்களை நினைத்து வேண்டினார். கார்த்திக் இத்தனை பேர் இத்தனை கஷ்டங்கள் படுவதற்கு பலனாக இந்த வேலையை செய்து முடிக்க வேண்டும் என்று வேண்டினார். முதல் ஷிஃப்ட் வேலையில் அனைவரும் இறங்கி வேலை செய்தார்கள். அவர்களால் முடிந்த வரை முழு மனதோடு வேலை பார்த்தார்கள். தமிழ் திட்டம் இட்டதை விட அதிகமாகவே எழைகள் முடிந்தது. ஆனாலும் வேலை அதிகமாக இருப்பதால் சோர்வு அடையாமல் இருக்க டீ காபி கொடுப்பது என்று சரஸ்வதி அனைவருக்கும் கொடுத்தார். மேலும் யாருக்கும் தூக்கம் வராமல் இருக்க நமச்சி பாட்டு போட்டு அவர்களை உற்சாகப்படுத்தினார். அடுத்த ஷிஃப்ட்க்கு அனைவரும் தயார் ஆனார்கள். ஆனால் அதில் சந்திரகலா காசு கொடுத்து வேலையை நிறுத்தி வைக்க சொண்ணவரும் வந்து இருந்தார். வேலை ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே கரெண்ட் போகும் வயரை துண்டித்து வேலையை நிறுத்திவிட்டார். பின் தமிழ் அதை சரி செய்து கொடுத்து மீண்டும் வேலையை ஆர்மபித்தார்கள். ஆனால் அதிலே 30 நிமிடங்கள் வீணாகியது. அடுத்த வேலையை ஆரம்பித்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…