Tamizhum Saraswathiyum Today Episode | 03.08.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினி இந்த வீட்டை விட்டு வெளியே போக முடிவு செய்தார். ஆனால் அதற்கு அர்ஜுனின் அம்மா, அக்கா, மாமா என்று அனைவரும் சேர்த்து அவர் மனதை மாற்றினார்கள். அதுவும் நாம் இந்த வீட்டை விட்டு வெளியே போனால் அது அந்த தமிழ் வெற்றி பெற்றதாக இருக்கும். அதனால் நாம் தோர்த்துவிட்டோம் என்பது போல் பேசினார்கள். அதை கேட்டதும் ராகினி அதெப்படி தமிழை ஜெயிக்க வைப்பேன், நமக்கு இந்த வீட்டில் இருக்க எல்லா உரிமையும் இருக்கு என்பது போல் நினைத்தார். அதே நேரம் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் இன்று கோவிலில் நடந்தது, ஆசிர்வாதம் வாங்கியது என்று எல்லாமே நல்லதே நடந்தது என்று சந்தோசத்தில் இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் அவர்களுக்கு கூடிய சீக்கிரமே குழந்தை பாக்கியம் உண்டாகும் என்ற நம்பிக்கையும் வந்தது. கோவிலில் இருந்து வீட்டுக்கு வந்ததும் வசுந்தரா அங்கு இருந்து ராகினி கிளம்பி இருப்பார் என்று நினைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author