தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா மற்றும் வசு அனைவரையும் சாப்பிட அழைத்தார் கோதை. ஆனால் சந்திரகலா எரிச்சலாக பேசினார். எப்போதும் சாப்பாடு மட்டும் தான் யோசிப்பீங்களா, அவளுக்கு பசிச்சா அவளே சாப்பிடுவார் என்று கத்தினார். தன் மகளையும் மருமகனை விருந்துக்கு அழைத்து செல்ல வந்ததாக கூறினார். பின் கார்த்திக் மற்றும் வசு இருவரும் கிளம்பினார்கள் விருந்துக்கு. அங்கு சென்றதும் சந்திரகலா தான் செய்தது தவறு தான் என்று ஒத்துக்கொண்டார். ஆனால் இதனால் எனக்கு மட்டும் தண்டனை கொடுங்கள், என் மகளை தண்டிக்க வேண்டாம் என்று கூறினார். ஆனால் கார்த்திக் அவர் பேசியதை எதையும் கண்டுகொள்ளவில்லை. நீங்கள் எங்கள் அறைக்குள் நடக்கும் விஷயங்களை விசாரிக்க வேண்டாம் என்று கூறினார். இதனால் வசு மிகுந்த வருத்தம் அடைந்தார். பின் தமிழ் சரஸ்வதியை பற்றி பேச வேண்டும் என்று நடேசன் முயற்சித்தார். பின் அவர் இந்த வீட்டு மருமகளாக வேண்டும் என்று எண்ணுவதாக கூறினார். கோதையும் அதியே கூறினார். ஆனால் கோதைக்கு தமிழ் காதலிக்கும் விஷயம் மறைக்க செய்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….