Tamizhum Saraswathiyum Today Episode | 04.01.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum.04.01.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வீட்டில் கோதையிடம் தயக்கமாக பேசினார். சரஸ்வதி வீட்டில் இருந்து விருந்துக்கு வரும்போது வசுவின் அம்மா எதையாவது பேசி மீண்டும் பிரச்சனை செய்வாரோ என்று பயமாக இருப்பதை கூறினார். ஆனால் வசு இல்லாத நேரமாக பேசினார்கள். வசு வந்ததும் அந்த பேச்சை நிறுத்தினார்கள். இதை கவனித்த கார்த்திக், வசுவை அழைத்து வந்தார். எல்லாரும் சேர்ந்து தானே பேச வேண்டும் என்று வசுவை விட்டுக்கொடுக்காமல் பேசினார். இதனால் வசு மகிழ்ச்சி அடைந்தார். பின் வசுவிடம் விஷயத்தை கூறினார்கள். வசுவும் தன் அம்மாவை வரவேண்டாம் என்று கூறினார். ஆனால் கோதை சம்பந்தி வரட்டும் என்று கூறினார். சொக்கலிங்கம் வாசுகி இருவரும் சரஸ்வதி இன்னும் வீட்டுக்கு வரவில்லையே என்று பதரினார்கள். சரஸ்வதியும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். ஆனால் அவர் தமிழுடன் பீச்சுக்கு சென்றதை ஒப்புக்கொண்டார். இதனால் சொக்கலிங்கமm கோவம் கொண்டார். திருமணம் முடியும் வரை வெளியில் சுத்துவதை நிறுத்துமாறு கூறினார். அடுத்த நாள் பெண் வீட்டார்கள் தமிழ் வீட்டிற்க்கு வருவதால் பரபரப்பாக இருந்தார் கோதை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…