Tamizhum Saraswathiyum Today Episode | 04.05.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 04.05.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் வீட்டுக்கு வரும் வழியில் ஒரு இடத்தில் நிறுத்தி காதல் செய்ய ஆரம்பித்தார்கள். எப்படியும் இந்த திட்டம் கண்டிப்பாக நடக்கும். அந்த சவாலில் நாம் தான் ஜெய்ப்போம் என்று கூறினார்கள். ஆனாலும் கோதையை ஏமாற்றுவது பெரிய தவறு தன் எனவும் வருந்தினார்கள். அந்த நேரம் நமச்சி அங்கு வந்து காசு வாங்கி செல்ல வந்தார். அந்த கூட்டத்தில் நடித்தவர்களுக்கு பணம் கொடுக்க. வீட்டுக்கு வந்த கோதை கோவிலில் நடந்த அனைத்தையும் கூறினார். அதை கேட்ட சந்திரகலா இதெல்லாம் நம்புகிற மாதிரி இல்லை என்றார். எப்படி இதெல்லாம் சாத்தியம். இது எல்லாம் எதார்த்தமாக நடப்பது போல் இல்லை என்று கூறினார். ஆனால் வசுந்தரா அப்படி இல்லை சித்தர் சொன்னால் அது எப்படி தவறாகும் என்றார். நடேசன் இது எங்கள் மகனின் உயிர் சம்மந்தப்பட்ட விஷயம் அதில் விவாதம் அனன் வேண்டாம் என்றார். அடுத்து ஜோசியறை வீட்டுக்கு வர வைத்தார்கள். அவரும் வந்ததும் தமிழ் சரஸ்வதி ஜாதகத்தை பார்த்து தமிழுக்கு எந்த தோசமும் இல்லை. ஆனால் அவர் திருமணத்துக்கு பிறகு செய்ய வேண்டிய சடங்குகளை ஏன் செய்யவில்லை என்று கேட்டார். அதெல்லாம் நடக்க வேண்டிய நேரத்தில் நடக்க வேண்டும் என்று கூறினார். உடனே அந்த சித்தர் சொன்னதையே செய்யும்படி கூறினார். இதை கேட்ட சந்திரகலா எதோ ஒன்று தவறாக இருப்பதாக உணர்ந்தார். சற்று நேரத்தில் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சேர்ந்து சந்திரகலாவை வெருப்பேற்றி பேசினார்கள். அந்த எரிச்சலில் கீதாவுக்கு அழைத்து நடந்ததை கூறினார். இதை பற்றி விசாரிக்கவும் செய்ய வேண்டும் என்றார். உடனே அந்த சித்தர் பற்றிய விவரங்களை கேட்டு வருமாறு கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…