தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் இன்று சரஸ்வதி வீட்டில் இருந்து வருவதால் பதட்டமாக இருந்தார். சொக்கலிங்கம் மற்றும் வாசுகி இருவரும் கோதை வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். வாடகை காரில் வந்து இறங்கினார்கள். சற்று நேரத்தில் சந்திரகலா அங்கு வந்து சேர்ந்தார். சொக்கலிங்கம் வாடகை காரில் வந்தது தெரிந்ததும் அதற்கு இளனம் செய்தார். சொக்கலிங்கம் தனக்கு எது தேவையோ அதை மட்டும் தான் வாங்க முடியும் என்று கூறினார். பின் வீட்டை சுற்றி காட்டினார்கள், வாசுகி எதிர்பார்த்ததை விட வீடு பெரிதாக இருப்பதாக கூறினார். அதற்கும் சந்திரகலா உங்க வீட்டிற்கு வேறு எந்த வீடாக இருந்தாலும் பெரிதாக தான் இருக்கும் என்று மீண்டும் குத்தலாக பேசினார். சற்று நேரத்தில் திருமணம் பற்றி பேசலாம் என்று கூறினார்கள். அதிலும் சந்திரகலா வேண்டும் என்று செலவை அதிகமாக்க வேண்டும் என்று நினைத்தார். மண்டபத்திற்கு மட்டும் 8 முதல் 10 லட்சம் ஆகும் படி பேசினார். சொக்கலிங்கமும் தன் நிலையை நினைக்காமல் வீம்புக்கு தானும் செய்வதாக ஒத்துkkகொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…