Tamizhum Saraswathiyum Today Episode | 05.05.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா கோதை வீட்டில் நடக்கும் அனைத்துமே எதோ ஒரு சதி என்று உணர்ந்தார். இது அனைத்தும் ஒரு நாடகம் போல் இருப்பதாக நினைத்தார். அதனால் கீதாவை வைத்து அந்த கோவிலில் இருந்த சித்தர் பற்றிய விவரங்களை கேட்டார். கீதாவும் அதை விசாரித்தார். அந்த சித்தர் இது வரை இந்த கோவிலுக்கு வந்தது இல்லை, ஆனால் வரும்போதே அவருடன் ஒரு 15 பேரை அழைத்து வந்ததாகவும் கூறினார். அப்படி ஒரு சித்தரே இல்லை என்றும் கூறினார். இதை கேட்ட சந்திரகலா மேலும் தெளிவு ஆனார். கண்டிப்பாக இது தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சேர்ந்து நடத்தும் மாதம் தான் என்று அறிந்து கொண்டார். உடனே இதற்கு எதாவது செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தார். தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் மின்னல் வீட்டுக்கு சென்று அங்கு சொக்கலிங்கம் பாட்டி வாசுகி என அனைவரையும் பார்த்தார்கள். கோதை என்னை சமையல் அறைக்குள் விட போகிறார் என்று உற்சாகமாக கூறினார். இதை கேட்டு அனைவரும் சந்தோசம் கொண்டார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author