தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி சமையல் அனைத்தும் முடித்த பின் அனைவருக்கும் பரிமாறிய பின் தமிழ் உடன் தனியாக சாப்பிடாமல் தனியாக ஒதுங்கினார். நடேசன் உடனே சாப்பிட வருமாறு கூறினார். ஆனால் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சாப்பிட மறுத்துவிட்டார்கள். மேலும் நடேசன் கோவத்தில் கத்தினார். காலையில் இருந்து தண்ணீர் கூட அருந்தாமல் இருப்பது நல்லதல்ல என்று கூறினார். மேலும் கோதையை இதற்கு ஒரு முடிவு காட்டுமாறு கூறினார். ஆனால் தமிழ் தங்கள் முடிவில் உறுதியாக இருப்பதாக கூறினார். சரஸ்வதி படிப்பை நிறுத்துவது நியாயம் இல்லை, என் உயிரை காப்பாற்றுவதே சரஸ்வதியின் தாலி பாக்கியம் தான். பின் எப்படி அவள் படிப்பு ஒரு சாமி குத்தம் ஆக முடியும் என்றார். நடேசன் கோதை யிடம் கடுமையாக பேசினார். உடனே ஒரு முடிவு எடுக்குமாறு கேட்டார். உடனே வசுந்தரா, தன்னால் தான் இவளோ பெரிய குழப்பம் நடந்தது என்று கூறினார். அதனால் தானும் சாப்பிட போவது இல்லை என்றார். ராகினி தன் பங்குக்கு இந்த குடும்பத்துக்கு ஒத்துமைதான் அழகே அதனால் எனக்கும் சாப்பாடு வேண்டாம் என்றார். நடேசன் தன் பிள்ளைகள் சாப்பிடாமல் தான் மட்டும் எதற்கு சாப்பிட வேண்டும் என்று அவரும் சாப்பிடாமல் இருந்தார். இதை கேட்டதும் கோதை, பின் நான் மட்டும் எதற்காக சாப்பிட வேண்டும் என்று அவரும் சாப்பிடாமல் போனார். ஆனால் அதை சரஸ்வதி உடனே தடுத்தார். கோதை சாப்பிட்டு மாத்திரை போட வேண்டும். கோதையின் உடல் நிலையைவிட தனக்கு இந்த படிப்பு ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் அவரை சாப்பிடும் படி கெஞ்சினார். இதனால் மனம் மாறிய கோதை சாப்பிட வந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…