Tamizhum Saraswathiyum Today Episode | 05.09.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 05.09.2022

tamizhum Saraswathiyum. 05.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதி இடம் சண்டை போட்டு உடனே நமச்சி வீட்டுக்கு சென்றார். அங்கு நமச்சி இன்று உனக்கு முதல் இரவு அன்று எதற்காக இங்கு வந்தாய் என்று கேட்டார். ஆனால் தமிழ் கோவத்தில் கத்தினார். சரஸ்வதி இன்று மனம் சரியாக இல்லை என்று முதல் இரவை நிறுத்தி விட்டதாக கூறினார். ஆனால் நமச்சி அவரை சமாதானம் செய்தார். அந்த நேரம் சரஸ்வதி தமிழுக்கு அழைத்தார். ஆனால் நமச்சி எடுத்து பேசினார். தமிழ் இங்கு தான் உள்ளார் என்று சொன்னதும் சரஸ்வதி நிம்மதியாக இருந்தார். மேலும் தமிழ் சாப்பிடவில்லை என்று கூறியதால் அவருக்கு சாப்பாடு வாங்க நமச்சி கிளம்பினார். அதே நேரம் நமச்சி சரக்கு அடிக்க ஜூசில் கலந்து வைத்து இருந்ததை தமிழ் தெரியாமல் குடித்து விட்டார். அந்த நேரம் மீண்டும் மது தமிழுக்கு அழைத்தார். மீண்டும் அந்த ரவுடிகள் வந்து பிரச்சனை செய்வதாக கூறினார். இதனால் தமிழ் உடனே மது வீட்டுக்கு கிளம்பினார். அங்கு என்ன நடந்தது? அடுத்து என்ன செய்தார் தமிழ்? காணொளியை பார்க்க…

About Author