Tamizhum Saraswathiyum Today Episode | 06.01.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum.06.01.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வீட்டில் என்ன நடந்தது என்று தெரியாமல் பதட்டமாக இருந்தார் சரஸ்வதி. சொக்கலிங்கம் மற்றும் வாசுகி இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். வீட்டில் அங்கு எந்த பிரச்சனையும் இல்லை நல்லபடியாக தட்டு மாதிவிட்டோம் என்று கூறினார்கள். ஆனால் சொக்கலிங்கம் முகத்தில் சந்தோசமே இல்லை என்று சரஸ்வதி வருந்தினார். சற்று நேரத்தில் மின்னல் சரஸ்வதியை வெளியில் அழைத்து சென்றார். பின் சொக்கலிங்கம் அங்கு நடந்த அனைத்தயும் பாட்டியிடம் கூறினார். ஆனால் இதை பற்றி சரஸ்வதியிடம் யாரும் சொல்ல வேண்டாம் என்று கூறினார். பணத்திற்கு நான் கடன் வங்கிகொள்கிறேன் ஆனால் இதை சரஸ்வதியிடம் சொல்ல வேண்டாம் என்று கூறினார். மின்னல் சரஸ்வதியை நேராக தமிழ் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றார். அங்கு தமிழின் முகம் வாடி இருப்பதை பார்த்து என்ன நடந்தது என்று கேட்டார். தமிழும் நடந்த அனைத்தையும் கூறினார்.சரஸ்வதி மிகுந்த வேதனைக்கு உள்ளானார். தமிழ் அந்த பணத்தை தானே தருவதாக கூறினார். அதை சொக்கலிங்கத்தை ஒத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். சரஸ்வதியும் கெட்டுபார்பதாக கூறினார். பின் வீடு திரும்பிய சரஸ்வதி தன் பாட்டியிடம் என்ன நடந்தது என்று கேட்டு தெரிந்துகொண்டார்.அடுத்து கோதை வீட்டில் என்ன நடந்தது? காணொளியை பார்க்க…