Tamizhum Saraswathiyum Today Episode | 06.01.2023 | Vijaytv
tamizhum Saraswathiyum. 06.01.2023
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் தான் இந்த கம்பேனியை அப்பா அம்மா அண்ணன் என்று யாரிடமும் சொல்லாமல் தனி ஆளாக வாங்குவதால் குற்ற உணர்ச்சியில் இருந்தார். இதனால் வீட்டுக்கு வருவதை கூட யாரையும் பார்க்க கூடாது என்று அனைவரும் படுத்த பின்னே வந்தார். வசுந்தராவிடம் மட்டும் தனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது என்று கூறினார். பின் அவரிடம் இந்த முடிவு தான் எடுத்து இருக்கிறேன். இதற்கு. உன் அம்மா தான் பணம் கொடுத்து உதவுகிறார் என்று கூறினார். இதை கேட்ட வசுந்தரா, இதெல்லாம் சரியான செயல் இல்லை. வீட்டுக்கு தெரியாமல் வாங்க இதில் எந்த அவசியமும் இல்லை என்று கூறினார். ஆனல் வசுந்தரா கூறும் எதையும் கேட்கும் நிலையில் கார்த்திக் இல்லை. மேலும் நாளைக்கே ரெஜிஸ்டர் செய்ய போவதாக கூறினார். பின் அர்ஜுன் இடம் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பார்க்கவும் சொன்னார். கார்த்திக் நடவடிக்கையில் மாற்றங்கள் இருப்பதை கவனித்த சரஸ்வதி, எதோ ஒன்று தவறாக நடக்கிறது என்று புரிந்து கொண்டார். கார்த்திக் நம் குடும்பத்தார் முகத்தை பார்க்க கூட முடியாத அளவுக்கு அப்படி என்ன காரியம் செய்கிறார் என்று யோசித்தார். அதை தமிழ் இடம் கூறி புலம்பவும் செய்தார். ஆனல் தமிழ், என் தம்பி அம்மா பேச்சை மீறி எதையும் செய்ய மாட்டான் என்று கூறினார். அடுத்த நாள் சந்திரகலா மற்றும் அர்ஜுன் இருவரும் தங்களுடைய திட்டம் நிறைவேற போகிறது என்று சந்தோசமாக இருந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…