Tamizhum Saraswathiyum Today Episode | 06.04.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சொக்கலிங்கம் வசுந்தராவுக்கு அழைத்தார். கொதையும் அதை எடுத்து பேசும்படி கூறினார். எடுத்ததும் சொக்கலிங்கம் தான் பேசுவதை வீட்டில் அனைவரும் கேட் என்று ஸ்பீக்கரில் போட சொன்னார். பின் சரஸ்வதி பாஸ் ஆனதால் சந்தோசத்தில் வீடே கொண்டாடியது. இவளோ நாளாக நான் ஒரு அப்பாவாக செய்ய முடியாத விஷயத்தை கோதை வீட்டுக்கு போனதும் குடும்பம் அவளை மாற்றி படிக்க வைத்துள்ளது என்று பெருமையாக கூறினார். சொக்கலிங்கம் வீட்டில் அனைவரும் சரஸ்வதியிடம் பேசுவது போல் அவர்களே பேசிவிட்டு எந்த பதிலும் எதிர் பார்க்கமல் வைத்தார்கள். பின் கோதை சரஸ்வதி பாஸ் ஆந்தற்கு பூஜை செய்து ஆசிர்வாதம் செய்தார். சரஸ்வதி தமிழிடம் நன்றி கூறினார். மேலும் இந்த வெற்றியை கொண்டாட வேண்டும் என்று ஸ்வீட் வாங்கிக்கொண்டு சந்திரகலா வீட்டுக்கு கிளம்பினார்கள். அங்கு சந்திரகலா மற்றும் கீதா இருவரும் இடிந்து போய் இருந்தார்கள். அவர்களை இன்னும் வெறுப்பை ஏற்றும் வகையில் தமிழ் சரஸ்வதி இருவரும் பேசினார்கள். இனியாவது எங்கள் குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று எச்சரித்தார் தமிழ். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author