தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் மனதை மாற்ற முயற்சி செய்தார் சந்திரகலா. நடப்பது அனைத்துமே எதோ சொல்லி வைத்து நடப்பது போல் தெரிகிறது என்றார். அது எப்படி தமிழ் வேலை செய்த இடத்தில் மட்டும் கரெண்ட் ஷாக் அடிக்கும்? நீங்கள் அந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவை பாருங்கள் என்றார். கார்த்திக் உடனே சந்தேகம் கொண்டு அந்த வீடியோவை அனுப்ப கேட்டு இருந்தார். ஆனால் அந்த கேமரா காலையில் இருந்து வேலை செய்யவில்லை என்று தகவல் வந்தது. இதை கேட்டதும் மேலும் சந்தேகம் வலுத்தது. அது எப்படி அந்த கேமரா மட்டும் வேலை செய்யாமல் போகும் என்று சந்திரகலா கார்த்திக் மனதில் மேலும் சந்தேகத்தை வளர்த்தார். இந்த வீட்டில் சரஸ்வதி ராஜ்ஜியமும் கம்பேனியில் தமிழ் ராஜ்ஜியம் இருக்க வேண்டும் என்று திட்டம் போட்டு இதை நடத்துகிறார்கள் என்று கூறினார். அதை கேட்டு கார்த்திக் யோசிக்க ஆரம்பித்தார். கோதை இடம் கேட்கவும் செய்தார். அதற்கு கோதை என்ன பதில் அளித்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….