Tamizhum Saraswathiyum Today Episode | 06.06.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வேலை நடக்கும்போது நடந்ததை நினைத்து சோர்ந்து போனார். இந்த பிரச்சனையால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வீணாகி விட்டது என்று வருந்தினார். இதனால் மீதி வேலைகளை முடிக்க முடியுமா என்ற பதட்டம் இருந்தது. ஆனால் சரஸ்வதி அவருக்கு நம்பிக்கை கொடுத்து மேலும் வேலை செய்ய வைத்தார். அந்த நேரம் இந்த வீணான நேரத்தை ஈடுகட்ட ஒரு திட்டம் கார்த்திக் கொடுத்தார். அது நல்ல ஐடியா என்று அதையே பின்பற்ற ஆரம்பித்தார்கள். இதனால் 40 நிமிடங்கள் வரை மிச்சம் ஆனது. இதை வைத்து மத்த வேலைகளை ஆரம்பித்தார்கள். காலையில் கோதைக்கு இரவில் நடந்த பிரச்சனைகள் தெரிய வந்தது. அதில் பதட்டம் அடைந்தார். ஆனால் தமிழ் பேசி புரிய வைத்தார். எந்த பிரச்சனையும் இல்லாமல் வேலைகள் சுமூகமாக நடப்பதை கூறினார். மேலும் இரவில் நடந்த பிரச்சனைக்கு தீர்வும் கார்த்திக் கொடுத்த ஐடியா சரி செய்தது என்று கூறினார். சந்திரகலா தான் நினைத்தது நடந்து விட்டது என்று சந்தோசமாக இருந்தார். ஒரு மணி நேரம் வேலை niruththi வைத்து இருப்பதால் கண்டிப்பாக தன் திட்டம் அனைத்தும் பலிக்கும் என்று நினைத்தார். ஆனால் அதையும் மீறி கூட்டணியா வேலை செய்து 1000 பீஸ்கள் தயார் ஆக்கினார்கள். அதிலும் எதாவது செய்ய வேண்டும் என்று ஒரு பொருளை உடைத்து யாருக்கும் தெரியாமல் அதில் கலந்து வைத்தார் சந்திரகலா அனுப்பிய நபர். அதையும் தாண்டி தமிழ் எப்படி அதை செய்து முடித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author