Tamizhum Saraswathiyum Today Episode | 06.07.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் இந்த ப்ராஜக்ட் மூலமாக எதிர்பார்த்ததை விட அதிகமாகவே லாபம் வந்து இருப்பதாக சந்தோசமாக கூறினார். அதை கேட்டதும் தமிழும் சந்தோசத்தில் இருந்தார். மேலும் இதை கோதை நடேசன் இடம் கூறினால் மேலும் சந்தோஷப்படுவார்கள் என்றார். பின் தொழிலாளர்கள் இல்லாமல் இந்த லாபம் இல்லை அதனால் இதற்கு அவர்களுக்கு ஒரு இனிப்பு வணகி கொடுக்க வேண்டும் என்று கூறினார் தமிழ். ஆனால் கார்த்திக் அதற்கு மறுத்து பேசினார். இப்படி எல்லாம் செய்ய முடியாது, அது பிரச்சனைகளை உருவாக்கும் என்றார். ஆனால் தமிழ் அதில் என்ன பிரச்சனை வரப்போகிறது, அம்மாவாக இருந்தாலும் இதை தன் செய்து இருப்பர் என்றார். மேலும் இனிப்புகளை வாங்கி தொழிலாளர்களுக்கு கொடுத்தார் லாபம் வந்ததற்கு. அவர்களும் சொந்தோசம் கொண்டார்கள். ஆனால் ராமு நேராக சந்திரகலாவிடம் சென்று நடந்ததை கூறினார். லாபம் வந்ததை வெளியில் சொன்னது கார்த்திக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்ததும் அதை வைத்து பிரச்சனை செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தார். மேலும் ராமுவுக்கு பணம் கொடுத்து லாபம் வந்து இருப்பதால் சம்பளத்தை ஏற்றி கேட்க வைக்க வேண்டும் என்று கூறினார். அவரும் செய்ய ஆரம்பித்தார். அடுத்த நாளே சம்பளம் ஏற்றி தருமாரு கேட்டார்கள். இதை கேட்டதும் தமிழ் அதிர்ச்சி அடைந்தார். கார்த்திக் இது போல பிரச்சினைகள் வரும் என்பதால் தான் வெளியே சொல்ல வேண்டாம் என்றேன் என்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author