Tamizhum Saraswathiyum Today Episode | 06.09.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் தான் செய்த தவறை நினைத்து வருந்தினார். நேராக நமச்சி வீட்டுக்கு சென்றார். அங்கு சென்று அன்று இரவு நடந்ததை கூறினார். தான் ஒரு நிலையில் இல்லை என்று கூறினார். இங்கு இருந்த ஜூஸை தான் குடித்ததாக கூறினார். பின் நமச்சி அதில் சரக்கு கலந்து வைத்து இருந்ததை கூறினார். இதனால் தான் தமிழ் ஒரு நிலையில் இல்லாமல் மது வீட்டுக்கு போய் இருக்க வேண்டும் என்று தெரிய வந்தது. பின் நமச்சி இனி இந்த பேச்சை எடுக்க வேண்டாம். நீ இன்று இரவு இந்த வீட்டில் என்னுடன் தன இருந்ததாக கூற வேண்டும். நீ மது வீட்டுக்கு போனதை யாரிடமும் கூற வேண்டாம் என்று கூறினார். இதை ஒரு கேட்ட கனவாக நினைத்து மறந்து விடு என்றார். ஆனால் தமிழ் தான் செய்த தவறை நினைத்து அழுது புலம்பினார். இனி எப்படி என் அம்மா சரஸ்வதி மூஞ்சியில் முளிப்பென் என்று புலம்பினார். என்னை பார்த்தால் எனக்கே அருவெறுப்பாக இருப்பதாக கூறினார். பின் வீட்டுக்கு வந்ததும் கோதை அம்மா தமிழை எங்கு சென்றார் என்று விசாரித்தார். அதற்கு சரஸ்வதி எந்த பிரச்சனையும் வெளியில் சொல்லமல் அவர் வாக்கிங் சென்றதாக கூறி சமாளித்தார். ஆனால் தமிழ் முகம் வாட்டமாக இருந்ததையும், யார் பேசுவதையும் கவனிக்காமல் வேறு ஒரு உலகத்தில் இருப்பதையும் கோதை கவனித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author