தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தான் தன் வீட்டு மூத்த மருமகள் என கோதை முடிவு செய்தார். நடேசன் தமிழ் சரஸ்வதி காதலிக்கும் விவரத்தை சொல்லாமல் கல்யாண வேலைகள் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி கோதைக்கு காதல் விஷயம் தெரியாமல் சரஸ்வதிக்கு அழைத்து பேசினார். தன் வீட்டுக்கு மருமகளாக வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சரஸ்வதியும் தனக்கு சம்மதம் தெரிவித்தார். பின் வசுகியிடம் கோதை பேசினார். தன்னால் முடிவு எடுக்க முடியாது என்று கூறினார். பின் சொக்கலிங்கத்திடம் கோதை, தன் விருப்பத்தை கூறினார். சொக்கலிங்கம் அவர் பேச்சை மறுக்க முடியாமல் சம்மதம் கூறினார். தமிழுக்கு இப்போது பயம் தொற்றிக்கொண்டது. சரஸ்வதி படிக்காத விஷயத்தை மறைக்க நினைத்தார்.உடனே சரஸ்வதி வீட்டிற்கு கிளம்பினார். அங்கு சொக்கலிங்கமத்திடம் எங்கள் காதல் விஷயம் அம்மாவுக்கு தெரியாது என்றும், சரஸ்வதி படிக்கவில்லை என்றும் கூறியிருப்பதாக கூறினார். அம்மா இங்கு வரும்போது சரஸ்வதி படிக்காத விஷயத்தை சொல்ல வேண்டாம் என்று கூறினார். இதை கேட்ட சொக்கலிங்கம் என்ன பதில் கூறினார்? காணொளியை பார்க்க…