Tamizhum Saraswathiyum Today Episode | 06.12.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 06.12.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை கம்பேனியில் சப்ளை செய்யும் ஒருவர் அடுத்த லோடில் இருந்து கிலோவுக்கு ஒரு ரூபாய் ஏற்றுவது தான் அவரது முடிவு என்று கூறினார். தமிழ் கார்த்திக் யோசித்து பேசுவதற்குள் அர்ஜுன் அது சரியாக வராது. எடுத்ததும் ஒரு ரூபாய் ஏற்றுவது சரி அல்ல என்று கூறினார். அதை கேட்டதும் அவர், நீயே இங்கு வேலை பார்க்கும் ஒரு நபர் தான், நீ எதற்காக இதில் தலையிடுகிராய் என்று கேட்டார். உடனே கார்த்திக் மற்றும் தமிழ் இருவரும் அர்ஜுன் எங்கள் வீட்டு மாப்பிள்ளை. அவருக்கு எல்லா உரிமையும் உண்டு. மேலும் அவர் கேட்பதில் எந்த தவறும் இல்லை. அவர் சரியாக தானே கேட்கிறார் என்று கூறினார்கள். ஆனால் அவர் மேலும் மரியாதை இல்லாமல் பேசவே, கார்த்திக் இனியும் உங்களோடு எந்த வியாபாரமும் செய்ய போவது இல்லை என்று உறுதியாக கூறினார். வீட்டுக்கு வந்ததும் கோதை நடேசன் இருவரும் நடந்ததை கேட்டு கோவத்தில் கத்தினார்கள். எங்கள் வீட்டு மாப்பிள்ளையை எப்படி தர குறைவாக, மரியாதை இல்லாமல் பேசலாம் என்று கேட்டார். அர்ஜுன் அந்த நேரம் உள்ளே வந்தார். வந்ததும் கோதை, நடேசன் இருவருமே நடந்ததை கேட்டு வறுத்தபட்டார்கள். மேலும் மன்னிப்பும் கேட்டார்கள். ஆனால் அர்ஜுன் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்களை பிரித்து பேசினார். அவர் சொன்னதும் சரிதான், நான் இந்த கம்பேனியில் வெறும் சாதாரண சம்பளம் வாங்கும் ஒரு நபர் தான், ஆனால் நான் தான் உரிமை எடுத்து அவரிடம் அவசரப்பட்டு பேசிவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறினார். இதை கேட்டதும் வீட்டில் அனைவரும் அர்ஜுன் நல்ல குணத்தை பாராட்டினார்கள். ஆனால் சரஸ்வதிக்கு மட்டும் இது எதுவுமே சரியாக இல்லாதது போல் உணர்ந்தார். அந்த நேர்ம அர்ஜுன் வேண்டும் என்றே குடும்ப புகைபடத்தை தள்ளி விட்டு எதோ ஒரு அசம்பாவிதம் போல் காட்டினார். தமிழ் இடம் சரஸ்வதி அர்ஜுன் நடவடிக்கை எதும் சரியில்லை என்று கூறினார். ஆனால் தமிழ் அதி ஏற்கவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….