Tamizhum Saraswathiyum Today Episode | 07.07.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 07.07.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தொழிலாளர்கள் தங்களுக்கு சம்பள உயர்வு பற்றி பேசியதை கோதை நடேசன் இடம் கூறினார்கள். அதை கேட்டதும் எப்படி 10% சம்பளம் ஏற்றி முடியும்? இந்த லாபத்தில் கண்டிப்பாக இவளோ பெரிய தொகை ஒதுக்க முடியாது என்றார்கள். ஆனால் அவர்கள் கேட்டதற்கு இல்லை என்று கூறவும் முடியாது என்று யோசித்தார். தமிழ் இதில் ஒரு 3% அல்லது 4% உயர்வு கொடுத்து சமாலிக்களாம் என்று கூறினார். ஆனால் கார்த்திக் அதற்கு மறுப்பு தெரிவித்தார். கோதை கார்த்திக் இடம் உன் கருத்து என்ன என்று கேட்டார். கார்த்திக் அதற்கு இந்த இழப்பை சரி செய்ய புரொடக்ஷன் கூட வேண்டும் என்று கூறினார். அதற்காக தன்னுடைய திட்டத்தையும் கூறினார். வேலை நேரத்தில் மிக கடுமையாக இருப்போம் என்று கூறினார். 8 மணி நேர வேலை நேரத்தில் ஒரு நிமிடமும் வீணாக்காமல் கணக்காக இருக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் இதில் தமிழுக்கு விருப்பம் இல்லை. அவர்கள் இந்த வேலையை நேரம் பார்க்காமல் செய்பவர்கள், அவர்களிடம் இப்படி கடுமையாக நடந்தால் அது சரியாக வராது என்று கூறினார். ஆனால் கோதை இருவர் சொன்னதையும் ஏற்றுக்கொண்டார். தமிழ் சொன்ன படி 4% சம்பள உயர்வு மற்றும் கார்த்திக் சொன்ன படி நேரம் thavaraaml வேலை செய்யும் திட்ட்டம் என்று இரண்டையுமே செய்யுமாறு முடிவு எடுத்தார். கார்த்திக் தன் பேச்சை கேட்டு செய்வதால் அவருக்கு பெருமை. அடுத்த நாள் தொழிலாளர்கள் இடம் இதை பற்றி கூறினார்கள். சம்பள உயர்வை பற்றி கேட்டதும் சந்தோசம் கொண்டார்கள். ஆனால் கார்த்திக் சொன்ன கண்டிசன் அவர்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் ஒத்துக்கொண்டார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…