Tamizhum Saraswathiyum Today Episode | 07.10.2021 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் தந்திரமாக திட்டமிட்டு ஷ்யாமை எப்படியாவது கெட்டவன் என சொக்கலிங்கத்திற்கு நிரூபிக்க நினைத்தார். அதற்கு ஏற்பாடுகளும் செய்தார். ஷ்யாம் கேட்ட 25 லட்சம் பணத்தை ஏற்பாடு பண்ணி கொடுப்பது போல் வீடியோ எடுத்து சொக்கலிங்கம் கண்ணில் காட்டிவிடலாம் என எண்ணினார். ஆனால் ஷ்யாம் தமிழ் சொன்னதை திரித்து இந்த திருமணத்தை நிறுத்த சதி செய்வது போல் சித்தரித்து கூறி உள்ளான். அதையும் சொக்கலிங்கம் நம்பி போலீசில் புகார் அளித்தார். அவர்களையும் அழைத்து வந்து தமிழை கைது செய்யுமாறு சொக்கலிங்கம் கூறினார். இதற்கிடையில் சரஸ்வதியும் பாட்டியும் எப்படியும் தமிழ் இந்த திருமணத்தை நிறுத்தி விடுவார் என நம்பினர். அடுத்து என்னவாகும்? காணொளியை பார்க்க…

About Author