Tamizhum Saraswathiyum Today Episode | 07.12.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 07.12.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் கம்பேனிக்கு இன்று ஒரு நாள் விடுப்பு எடுக்குமாறு கூறினார். ஆனால் அர்ஜுன் அது முடியாது வேலை அதிகமாக இருப்பதாக கூறினார். உடனே வீட்டில் இருப்பவர்கள் மாப்பிள்ளை இன்று யாருக்குமே வேலைக்கு செல்ல வேண்டாம். இன்று குடும்பமாக வெளியே சென்று வர வேண்டும் என்று கூறினார் கோதை. அர்ஜுன் மற்றும் அவரது குடும்பமும் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அர்ஜுனின் அக்கா மாமா மற்றும் அம்மா மூவரும் நேற்று போல் வெறும் கோவிலுக்கு அழைத்து சென்று ஏமாற்றி விடுவார்கள் என்று நினைத்து வரவில்லை என்று கூறினார்கள். ஆனால் உண்மையில் கோதை குடும்பமாக சேர்த்து படத்துக்கு சென்று, பின் கடைக்கு சென்று சாப்பிட்டுவிட்டு கடற்கரைக்கு சென்று வந்தார்கள். இந்த விவரம் அவர்கள் வீடு திரும்பியதும் தான் இவர்களுக்கு தெரிய வந்தது. இதனால் கோவத்தில் இருந்தார்கள். பின் அர்ஜுனின் அக்கா மாமா அனைவரும் ஊருக்கு உடனே கிளம்ப போவதாக கூறினார்கள். இங்கு போடும் சாப்பாடு எதுவும் சரி வரவில்லை. எதோ நோயாளி சாப்பிடுவது போல் உள்ளது என்று புலம்பினார். அதற்கு அர்ஜுன் இந்த வீடு, சொத்து, இவர்கள் நடத்தும் கம்பேனி அனைத்துமே நம்முடையது. இது அனைத்துமே நம் கைக்கு கூடிய விரைவில் வந்து விடும் என்று கூறினார் அர்ஜுன். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….