Tamizhum Saraswathiyum Today Episode | 08.04.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தன் பாட்டி குடுத்து விடப்போகும் பிரியாணிக்காக இப்போது தனக்கு சமைக்க வேண்டாம் என்று சொல்ல நினைத்தார். அதனால் தனக்கு வயிற்று வலி என்று பொய் சொன்னார். இதனால் கோதை கோவம் கொண்டார். கண்ட பொருளை ருசிக்காக சாப்பிட்டால் இப்படி வயிறு வலி வரதான் செய்யும் என்று கூறினார். பின் அபியை கஷாயம் போட்டு கொடுக்க சொன்னார். சற்று நேரத்தில் மின்னல் அங்கு வந்து கோவில் பிரசாதம் என்று கூறி பாட்டி செய்த பிரியாணியை கொடுத்து சென்றார். சரஸ்வதியும் அதை அவர் அறைக்கு எடுத்து சென்றார். அவர் சாப்பிட ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே வசுந்தரா கதவை தட்டினார். உள்ளே வந்து பிரியாணி வாசனை துளைக்கிறது என்று கூறினார். பின் சரஸ்வதி மற்றும் வசுந்தரா இருவருமே சேர்ந்து அந்த பிரியாணியை சாப்பிட ஆரம்பி்த்தார்கள். அபி கஷாயம் கொடுக்க அறைக்கு வந்தார். அப்போது அங்கு வந்த வாசனையை நுகர்ந்து எதோ ஒரு வாசனை என்று குழப்பத்தில் கிளம்பினார். கீழே போனதும் கோதையிடம் பிரியாணி வாசனை வருவது போல் இருப்பதாக கூறினார். உடனே சந்தேகம் கொண்ட கோதை சரஸ்வதி அறைக்கு வந்தார். நடேசன் மற்றும் கோதை இருவரும் சரஸ்வதியை சந்தேகமாக பார்த்தார்கள். ஆனால் அங்கு எந்த வாஸ்னையும் வரவில்லை. சாப்பாடும் இல்லை. அதனால் அங்கு இருந்து கில்மாபினார்கள். கோதை சந்தேகம் கொண்டு வந்து தேடுவார் என்று கணித்த சரஸ்வதி அனைத்தையும் முன்னரே ஒளித்து வைத்துவிட்டார். ஆனால் கோதையின் சந்தேகம் தீரவில்லை. அதனால் சரஸ்வதி மீது ஒரு பார்வை வைக்க வேண்டும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..

About Author