Tamizhum Saraswathiyum Today Episode | 08.06.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 08.06.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை அவரது பிள்ளைகளை நினைத்து பெருமை கொண்டார். தமிழ் சொன்னதை கண்டிப்பாக செய்து முடிப்பான் அதுவும் நேர்மையாக செய்து காட்டுவான் என்று பெருமையாக பேசினார்கள். அப்போது சரஸ்வதி நடக்கும்போது காலில் இரும்பு கம்பி குத்தியது வீட்டில் அனைவருக்கும் தெரிய வந்தது. உடனே ராகினி நானே மருந்து போடுவதாக கூறி மருந்து போட்டு கட்டு போட்டு விட்டார். பின் அனைவரும் சரஸ்வதி இவளோ கஷ்டப்பட்டாவது இந்த வேலையை செய்து முடித்தார் என்று பாராட்டினார்கள். அவர்களை பார்த்து கோதை நடேசனுக்கு எவளோ உதவியாக இருந்தாரோ அதே போல் தமிழுக்கு சரஸ்வதி என்று பேசினார்கள். கார்த்திக் இதை எல்லாம் பார்த்து சற்று பொறாமையும் பட்டார். ஆனால் தமிழ் இரவில் கரெண்ட் நின்னதும் ஒரு மணி நேரம் வீணானது. ஆனால் அதை எப்படி சரி செய்வது என்று கார்த்திக் தான் திட்டம் போட்டு கொடுத்தான். அந்த நேரத்தில் அந்த ஐடியா கார்த்திக் கொடுக்கவிட்டால் இந்த வேலையை முடித்து இருக்க முடியாது. அதனால் இது அவனால் தான் நடந்தது என்று கூறினார் தமிழ். இதை கேட்டதும் கோதை, இதை போல் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுக்காமல் ஒத்துமையாக இருந்தால் தான் நமது குடும்பத்துக்கு பலம் என்று கூறினார் கோதை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…