Tamizhum Saraswathiyum Today Episode | 08.06.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் உமாபதியின் உறுதுணையோடு தேர்தல் வேலைகளை ஆரம்பித்தார். வழியில் அர்ஜுன் தமிழை பார்த்து குத்தலாக பேசினார். வேண்டும் என்றே தமிழை இந்த போட்டியில் நிற்கவிடாமல் செய்யலாம் என்று நினைத்து பேசினார். தமிழ் இந்த போட்டியில் தோல்வி அடைந்தால், இந்த சரஸ்வதி இண்டஸ்ட்ரீசை மூடி விட வேண்டும் என்று சவால்விட்டார். இப்படி பேசினால் கண்டிப்பாக அவர் இந்த போட்டியில் நிற்க மாட்டார் என்று நம்பி பேசினார். ஆனால் தமிழ் அந்த சவாலை ஏற்றுக் கொண்டு போட்டியில் நிர்ப்பேன் என்று கூறினார். இதை எதிர் பார்க்காத அர்ஜுன் அதிர்ச்சியில் நின்றார். அதே போல் தமிழ் வெற்றி பெற்றால் அர்ஜுன் இந்த கோதை இண்டஸ்ட்ரீஸ் விட்டு விலக வேண்டும் என்று கூறினார். அதற்கும் அர்ஜுன் வேறு வழி இல்லாமல் ஒத்துக்கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author