Tamizhum Saraswathiyum Today Episode | 08.07.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினி அவரது அப்பா நடேசன் இடம் தன் விருப்பத்தை கூறினார். நடேசனும் கோதை இடம் பேசி முடிவு செய்யலாம் என்றார். உடனே கோதை இடம் வந்து பேச ஆரம்பித்தார் ராகினி. வீட்டில் அனைவரும் சந்தோசமாக இருக்கும் இந்த நேரத்தில் குடும்பமாக வெளியே செல்லலாம் என்று கூறினார். ஆனால் கோதை அதற்கு மறுத்துவிட்டார். ஆனால் ராகினி விடாமல் கேட்டார். தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கொடுத்தது போல் வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு விருந்து போல் குடும்பமாக சேர்ந்து வெளியே போகலாம் என்றார். நடேசனும் அதற்கு தான் ஆசை பட்டார். சரஸ்வதியும் வசுந்தராவும் அதற்கு ஆசை பட்டார்கள். பின் கோதையும் அதற்கு மனம் மாற ஆரம்பித்தார். மேலும் தமிழ் கார்த்திக் இருவரிடமும் அவர்களது கருத்தை கேட்டார். அதில் தமிழுக்கும் ராகினி ஆசைப்படி வெளியே செல்லவேண்டும் என்று தான் கூறினார். ஆனால் கார்த்திக் அதெல்லாம் தேவை இல்லை என்றார். பின் அம்மாவின் முடிவே தன் முடிவு என்றார். பின் கோதை ஒத்துக்கொண்டார். ராகினி இன்று முழுவதும் என்ன செய்ய வேண்டும் என்று பட்டியல் போட்டார். முதலில் மாலுக்கு சென்று தனக்கு தேவையான அனைத்தயும் வாங்கிக்கொண்டு, பிடித்ததை சாப்பிட்டு, ஊர் சுற்றி முடித்து, கடற்கரைக்கு செல்ல திட்டம் போட்டார்கள். ஆனால் முதலில் கோவிலுக்கு போய்விட்டு பின் இங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றார். அதன்படி அனைவரும் தயார் ஆனார்கள். ஆனால் போன இடத்தில் வசுந்தராவின் தூரத்து சொந்தமான ஒரு குடும்பத்தை பார்க்க நேரிட்டது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author