தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வீட்டுக்கு போக விருப்பம் இல்லாமல் அந்த வேலை இந்த வேலை என்று பொய் சொல்லி நேரத்தை கடத்தினார். ஆனால் நமச்சி அதை கண்டு பிடித்து இன்று உனக்கு முதல் இரவு, உடனே கிளம்பு வீட்டுக்கு என்றார். ஆனால் தமிழ் தான் செய்தது பெரிய தவறு, சரஸ்வதிக்கு செய்த மிக பெரிய துரோகம் இதை மறைத்து என்னால் அவர்கள் முகத்தில் முழிக்க முடியவில்லை என்று கூறினார். ஆனால் நம்சி அதை சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார். வீட்டுக்கு வந்ததும் தன் குடும்பத்தார் முன் எந்த பிரச்சனையும் இல்லாதது போலும், தான் நல்ல மன நிலையில் இருப்பது போலும் நடித்து விட்டு அவரது அறைக்கு சென்றார். கோதையும் தன் மகன் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கிறான் என்று சந்தோஷப்பட்டார். பின் சரஸ்வதி தனக்கு இன்று முதல் இரவு என்று ஆசையாக கிளம்பி அறைக்குள் வந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…