தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா அவருக்கு தெரிந்த அத்தனை உண்மையையும் சபையில் வைத்து உடைத்தார். கோதை அதை எல்லாம் கேட்டு அதிர்ச்சியின் இருந்தார். பின் சொக்கலிங்கத்திடம் இவர்கள் சொல்வதை எல்லாம் உண்மையா என்று கேட்டார்! அதற்கு சொக்கலிங்கம் பதில் சொல்ல முடியாமல் தவித்தார். பின் சந்திரகலா அவர் பொய் சொல்ல கஷ்டப்படுகிறா், அதனால் பாட்டியிடம் கேட்டு பாருங்கள் பொய் தானாக வரும் என்றார். பின் சொக்கலிங்கம் தன செய்தது பெரிய தவறு தான் என்னை மன்னித்து விடு கோதை. என் மகள் இன்னும் +2 வே முடிக்கவில்லை. ஆனால் முதல் நாள் பெண் கேட்டு வந்த போது நான் உண்மையை சொல்ல நினைத்தேன் ஆனால் தமிழ் அதை தடுத்துவிட்டார் என்றார். தமிழ் தான் வற்புறுத்தி என்னை பொய் சொல்ல வைத்தார் இந்த திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்று கூறினார். அதனால் நானும் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு என்று கை கூப்பி நின்றார். கோதை தமிழை பார்த்து அதிர்ச்சியில் நின்றார். நீயா பொய் சொல்லி அம்மாவை எமாத்தினாய் என்று கேட்டார்! நீயா என் முதுகில் குத்தியது என்று கேட்டார்! அப்படியே மயக்கம் போட்டு கீழே விழுந்தார் கோதை. உடனே அனைவரும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். நடேசன் தமிழ் மீது கோவத்தில் கத்தினார். கார்த்திக், வசுந்தரா, ராகினி என்று அனைவரும் தமிழ் சரஸ்வதி இருவரையுமே கோதையின் இந்த நிலைக்கு காரணம் என்று கூறினார்கள். பின் சரஸ்வதி எதற்காக இப்படி செய்தோம் என்று ஆரம்பித்தார். சந்திரகலா கீதாவிடம் பேசியது, குடும்பத்தை பிரிக்க நினைத்து, கொதையை மயக்க மருந்து கொடுத்தது என்று அனைத்தையும் கூறினார். ஆனால் அதை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை. அடுத்தடுத்து பதட்டங்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..