தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் கீதா வீட்டுக்கு வந்து தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு செய்ய அழைக்க வந்தார். மேலும் கீதா செய்யும் காரியங்களை இனி செய்ய வேண்டாம் என்றும் எச்சரித்தார். ஆனால் கீதா வெறுப்போடு இருந்தார். சரஸ்வதிக்கு மயக்க மாத்திரை கொடுத்து பரிட்சை எழுத கூடாது என்று நினைத்ததை கோதையிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். தமிழும் அதை கோதை அம்மாவிடம் சொல்ல மாட்டேன் என்று கூறினார். தமிழ் கிளம்பிய உடனே சந்திரகலா அங்கு வந்தார். கோவிலில் அந்த சித்தர் இருந்ததை யாரோ வீடியோ எடுத்து இருப்பதை கீதாவிடம் காமித்தார். அதில் அந்த சித்தர் வேஷத்தில் இருந்தது நமச்சி தான் என்று தெரிய வந்தது. மேலும் அவர்களுக்கு இளநீர் கொடுத்ததும் அதே நமச்சி தான் என்று புரிந்து கொண்டார்கள். இதனால் உடனே நமச்சிக்கு அழைத்து அவர் வாயாலே எதையாவது உண்மையை வாங்க வேண்டும் என்று திட்டம் போட்டார்கள். சித்தர் உடன் நடித்த சிலரில் ஒருவருக்கு பணம் இன்னும் வந்து சேரவில்லை என்று பேசுவது போல் ஆரம்பித்தார்கள். ஆனால் நமச்சி இதில் எதோ ஒரு சூழ்ச்சி இருப்பதை கண்டு கொண்டார். இது அனைத்தும் சந்திரகலாவின் திட்டம் என்று உணர்ந்தார். அதனால் அவரும் தெளிவாக பதிலளித்து விட்டார். பின் ஆதி அந்த கும்பலில் ஒருவரை தாங்க நடித்தோம் என்று கோதை முன் சொல்ல வைக்கலாம் என்று அடுத்த திட்டம் கொடுத்தார். அதற்கான வேலையில் இறங்கினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…